முன்னொரு காலத்தில் மாதவிடாய் நேரத்தின் போது அந்த மூன்று நாட்களும் பெண்கள் வீட்டுக்கு வெளியே தான் இருக்க வேண்டும்.
எந்த காரணத்திற்காகவும் வீட்டுக்குள் நுழையக் கூடாது, சாப்பாடு எல்லாமே வெளியே தான்.
தொழில்நுட்பம், அறிவியல் என உச்சத்தை தொட்டாலும் இன்னும் இந்த கொடூர பழக்கவழக்கம் உலகில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
இதற்கு உதாரணமாக நேபாளில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது, நேபாளை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கு மாதவிடாய்.
இதனால் வீட்டை விட்டு வெளியே தொழுவத்தில் படுத்திருந்தார், இரவு உணவு சாப்பிட்ட பெண் மறுநாள் காலை சடலமாத் தான் மீட்கப்பட்டார்.
பனி கொட்டும் வேளையில் இதமாக இருக்க தீ மூட்டியுள்ளார், அந்த தீ அவளுக்கே வினையாகிப் போனது.
குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்குள் இருந்ததால் அவளுடைய அலறல் சத்தம் அவர்களுக்கு கேட்கவே இ்ல்லை.
காலையில் எழுந்து பார்த்த போது தான், மகள் சடலமாக இருந்ததை பார்த்துள்ளனர், இப்போது கதறித் துடித்து என்ன பிரயோஜனம்.
இதுமட்டுமா தொழுவத்தில் தங்கியிருக்கும் போது விஷப்பூச்சிகள் தீண்டுதல், காமக் கொடூரர்களின் பார்வைகள் என பலியாகும் பெண்கள் இன்னும் ஏராளம்.