புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.
தலைமைச் செயலகத்தில் பதவியேற்ற இவருக்கு ஏனைய துறைகளின் செயலாளர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு கிரிஜா வைத்தியநாதன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
இந்நிலையில் 4-வது பெண் தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றுள்ளதையடுத்து, அவர் தமிழகத்தின் 45-வது தலைமை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக தலைமை செயலாளராக இருந்து ராம மோகனராவின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராம மோகனராவ் பதவியில் இருந்து நீக்கப்பட்டு நிலையில், புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவியேற்றுள்ளார்.