பிரான்ஸ் நாட்டில் ரஷ்யாவுக்கு உளவு தகவல்களை அனுப்பி வந்த அந்நாட்டு உயர் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு நாடும் தங்கள் எதிரி நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தங்கள் நாட்டின் பாதுகாப்பு கருதியும் உளவுத்துறைகளை வைத்துள்ளன. இதில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள், அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க உளவு பார்ப்பது மற்றும் சைபர் தாக்குதல் போன்ற நடவடிக்கைகளின் ஈடுபட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டின் இறையான்மையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் பிரஞ்சு ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் ரஷ்யாவுக்கு உளவுத் தகவல்களை அனுப்பி வந்த்தாக கூறி அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. இந்த அதிகாரி இத்தாலியில் நேட்டோ தளத்தில் பணியாற்றி வந்ததாகவும் அங்கிருந்து தகவல்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி, சம்மந்தப்பட்ட நபர் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நீதித்துறை நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. இந்த தகவல் கசிவை தொடர்ந்து பிரெஞ்சு இராணுவம் “தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தெரிவித்தார்.
இருப்பினும் அந்த அதிகாரி தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தற்போது பிரான்ஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.