குன்னூரில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கீழ் அட்டடி, தேயிலை தோட்டங்களும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாகும். இந்த பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நேற்றிரவு மதில் சுவர் தாண்டி குதித்த வடமாநில இளைஞர்கள் சிலர் குடியிருப் பகுதிக்குள் நுழைந்தனர். அப்போது நாய் குரைத்ததால் வீட்டின் உரிமையாளர் வந்து கதவை திறக்கும் போது திருடர்கள் தப்பி அருகில் உள்ள முள்புதர்களில் மறைந்து கொண்டனர். இந்த காட்சி கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் கிராம மக்கள் ஒன்றாக திரண்டு தப்பி ஓட முயன்ற 5 நபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், அந்த பகுதியில் வடமாநில இளைஞர்கள் தங்கி வேளை பார்க்கக் அனுமதிக்க கூடாது என்றும், இரவு நேரங்களில் காவல் துறை ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.