பிரித்தானியாவில் இந்திய உணவகம் ஒன்றின் பணியாளர்கள் ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் Bradfordஇல் அமைந்துள்ளது பிரபல இந்திய உணவகமான அக்பர் உணவகம்.
அந்த உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் ஏழு பேருக்கு மூன்று வார காலகட்டத்தில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவே, அந்த உணவகத்தை ஐந்து நாட்களுக்கு மூடவும், பாதிக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தவும் முடிவு செய்தார் உணவகத்தின் உரிமையாளரான ஷாபிர் ஹுசைன்.
ஹுசைனின் இந்த முடிவுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் சாரா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ஹுசைனின் உணவகம் சிறப்பாக கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் உணவகத்துக்கு வருவோருக்கு அபாயம் ஏற்படும் என்பதற்கான அச்சமும் இல்லை. இருந்தாலும் ஹுசைன் உணவகத்தை மூட முடிவு செய்துள்ளார்.
ஒரு தொழிலை திடீரென மூடுவது அவ்வளவு எளிதல்ல, என்றாலும் சமூகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு பாராட்டுக்குரியது என்றார் அவர்.