அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொக்டர் மார்க் டி. எஸ்பர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி உரையாடலின்போது கொரோனாத் தொற்றை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அத்தோடு இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றத்தை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.
மேலும் இந்தபோது அனைத்து நாடுகளின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பொதுவான இருதரப்பு பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடிய இருவரும் இராணுவ தொழில்மயமாக்கல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடினர்.