சந்தன மரத்தில் அதிகம் பயன் தருபவை அதன் மரக்கட்டைகள் தான், சந்தன விதைகள் மருத்துவத்தில், பயன்படுகின்றன.
உடல் சூட்டை தணிக்கும் சித்த வைத்திய முறைகளில் அதிக பலன்கள் தரும் மருந்துகள் அனைத்தும் சந்தன எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும். மேலும் உடலில் பூசும் கிரீம்கள், வெயிலில் தோல் கருத்த சரும பாதிப்புகளை சரிசெய்யவும், தோலுக்கு இறுக்கத்தை அளிக்கவும் பயன்படுகின்றன.
சந்தனக்கட்டைகளை அரைத்து தலையில் தடவி வந்தால் கோடை வெயிலால் தலையில் ஏற்படும் கொப்புளங்கள் குணமாகும். மேலும், தலைவலி, மூளை, இதய பாதிப்புகளை சரிசெய்து, உடல் நிலையை சமநிலையில் வைக்கும்.
சுத்தம் செய்த நல்ல சந்தனத்தை நீரில் கரைத்து அருந்திவந்தால் இரத்தத்தை தூய்மை செய்து, உடலை குளுமையாக்கி, மனதை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாகவே வைத்திருக்கும்.
சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றுடன் அரைத்து உடலில் உள்ள அரிப்பு, நமைச்சல், சொறி சிரங்கு, தேமல், வீக்கம் மற்றும் சகல சரும வியாதிகளுக்கும் குணமாகும்.
சந்தனத்தூளை தண்ணீரில் கொதிக்க வைத்து பருகிவந்தால் சிறுநீர் எரிச்சல் விலகிவிடும், இதுவே இரத்த மூல வியாதியையும் சரி செய்யும். சூட்டினால் உண்டாகும் கண் கட்டிகள் மறைய, சந்தன விழுதை எலுமிச்சை சாற்றில் கலந்து இரவில் கண் கட்டிகளின் மேல் தடவி வந்தால் குணமாகும்.