இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திருப்பதியில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
தமது மனைவியுடன் இந்த வழிபாடுகளில் அவர் பங்கேற்றதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக அவர்களை திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் சபை தலைவர் கிருஸ்ணமூர்த்தி உட்பட்டோர் வரவேற்றனர்.
இதன்பின்னர் அவர்கள் வழிபாடுகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.
இலங்கையின் பிரதமருக்கு குருக்கள் சில்க் வஸ்திரத்தை வழங்கிய நிலையில் அதிகாரிகள் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.
இதன்போது கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, தனிப்பட்ட விஜயமாகவே தாம் இந்தியா வந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை இந்திய உறவு வலுப்பெற வேண்டும் என்றும் மக்கள் நலம்பெறவேண்டும் என்றும் தாம் வேண்டிக்கொண்டதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பிரதமருடன் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரும் திருப்பதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.