Loading...
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கை பூர்த்தியாகியுள்ளதை அறிவிக்க காப்பீட்டு பத்திரங்கள் மற்றும் அந்நிய செலாவணி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
Loading...
ஆணைக்குழுவின் தலைவர் விராஜ் தயாரத்ன, பணிப்பாளர் சிந்தக மெண்டிஸ் ஆகியோரிடம் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர், கொரோனா வைரஸ் காரணமாக 52 நாட்கள் கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் சீர்குலைந்ததாகவும், அதனை டிஜிட்டல் மயப்படுத்தியதன் மூலம் பங்குச் சந்தை புதிய தோற்றத்தில் செயற்படும் எனவும் கூறியுள்ளார்.
Loading...