பஞ்சாபில் இடம்பெற்ற கொள்ளை முயற்சியில் குடும்பத்தினரை இழந்த கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் இடம்பெற்ற கொள்ளை முயற்சியில் ரெய்னாவின் மாமா கொல்லப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்ட அத்தை மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் அந்த உறவினர் நேற்றிரவு பலியானதாகவும், அத்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக இன்று ரெய்னா ட்விட்டரில் தெரிவித்தார்.
மேலும், குற்றவாளிகளை விடக்கூடாது என்றும், பொலிசாரை தீவிர விசாரணை மேற்கொள்ளும் படி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், மீளா துயரத்தில் இருக்கும் ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ரெய்னாவின் ட்விட்டை மேற்கோள்காட்டி நடிகர் சூர்யா பதிவிட்டதாவது, ரெய்னா உங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன் நாங்கள் எல்லோரும் உங்களது துயரத்தில் பங்குகொள்கிறோம்.
இதயமற்ற குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உங்களின் அமைதிக்காகவும் மனவலிமைக்காகவும் இறைவனிடம் வேண்டிடிக்கொள்கிறேன் என சூர்யா தெரிவித்துள்ளார்.