Loading...
Blu எனும் நிறுவனம் பட்ஜட் விலையில் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
Blu G90 Pro எனும் குறித்த கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடையதும் 2340 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
தவிர MediaTek Helio G90 processor பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
Loading...
இவற்றுடன் 32 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை கொண்ட இரு கமெராக்கள் என 4 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.
Android 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியில் 5000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.
இதன் விலையானது 250 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Loading...