பிரான்சில் பாரீஸ் செல்லவேண்டிய நான்கு ரயில்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 20 மணி நேரம் வழியிலேயே நிற்க நேர்ந்ததற்காக ரயில்வே நிர்வகம் மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
Hendaye நகரிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்ட நான்கு ரயில்கள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வழியிலேயே நின்றுவிட்டன.
ஆயிரக்கணக்கானோர் உணவும் தண்ணீரும் மட்டுமின்றி, காற்று கூட இல்லாமல் அவதியுற்றனர்.
இதில் பொது போக்குவரத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதால், மாஸ்குடன் படாத பாடு பட்டனர் மக்கள்.
முதலில் தண்ணீரும் உணவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவை வழங்கப்படாதது மேலும் சூழலை மோசமாக்கியது.
கடைசியில் 20 மணி நேரத்திற்குப்பின் ரயில் பயணிகள் பேருந்தில் ஏற்றப்பட்டு பாரீஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ரயிலுக்கு மின்சாரம் வழங்கும் கேபிள்களில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், அது தொடர்பாக விசாரணை ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கிடையில், பயணிகளின் பயணச்சீட்டுக்கான கட்டணம் அவர்களுக்கு மூன்று மடங்காக திருப்பி அளிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.