கைப்பேசி உலகின் ஜாம்பவான் ஆக திகழும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவில்லை.
இவ் வருடமும் அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 12 கைப்பேசிகள் 4G தொழில்நுட்பத்தினைக் கொண்டவையாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.
இந்நிலையில் இவ் வருட இறுதியில் 5G கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது 75 மில்லியன் கைப்பேசிகளை வடிவமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் அடுத்த தலைமுறைக் கைப்பேசிகளின் எண்ணிக்கையை 80 மில்லியன் வரை ஏற்றுமதி செய்வதற்கும் ஆப்பிள் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றினை விட புதிய iPad Air, Apple Watch போன்றவற்றினையும் வடிவமைப்பதற்கு ஆப்பிள் எதிர்பார்த்துள்ளது.