தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,39,959 ஆக உயர்ந்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் கொரோனா உயிரிழப்புகள்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,516 ஆக உயர்ந்துள்ளது.
அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,891 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,80,063 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 52,380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு – பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 4,39,959 பேரில், 2,65,688 பேர் ஆண்கள், 1,74,242பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 49,64,141 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 75,829 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு:
சென்னையில் 1,025 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,37,732 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு: