Loading...
கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது.
தெஹிவளை, களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் வயோதிப பெண்ணொருவர் வீதியை கடக்க முடியாமல் தடுமாறிய நிலையில், அங்கு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி வருக்கு உதவி செய்துள்ளார்.
குறித்த வயோதிப பெண் வீதியை கடக்க முடியாமல் திணறும் வேளையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்துள்ளனர்.
Loading...
எனினும் கடமையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி விரைந்து செயற்பட்ட விதம் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்கான சென்ற வயோதிப பெண்மணியை வீதியை கடக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...