விமானத்தில் பயணம் செய்ய வந்த டிரம்ப் மகளிடம் வழக்கறிஞர் ஒருவர், உங்கள் அப்பாவால் தானே நாடே கெட்டு போய்விட்டது என்று கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் டிரம்ப் மகளான Ivanka Trump நேற்று காலை தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் John F. Kennedy விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் செல்வதற்காக JetBlue விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளார்.
அப்போது திடீரென்று விமானத்தில் இருந்த பயணி ஒருவர் Ivanka Trump ஐ பார்த்து, உன் அப்பாவால் தான் இந்த நாடே கெட்டு போய் விட்டது, நீ ஏன் இந்த விமானத்திற்கு வந்தாய், உங்களுக்குத் தான் தனியாக விமானம் இருக்கிறதே என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைக் கண்ட விமான ஊழியர்கள் உடனடியாக அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி விமானத்தை விட்டு கீழே இறக்கி விட்டுள்ளனர்.
இதனால் கோபமடைந்த அவரது மனைவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அவர்கள் தனியாக செல்வதற்காக என் கணவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார், பின்னர் இதனை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் விமான அதிகாரிகளோ, வார்த்தை போர் முற்றியதால் தான் கீழே இறக்கிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் அடுத்த விமானத்தில் அவருக்கு இடம் ஒதுங்கி தந்ததாகவும் கூறியுள்ளனர்.
Ivanka Trump உடன் வாதத்தில் ஈடுபட்டவர் ஒரு வழக்கறிஞர் என்றும் அவருடைய பெயர் Dan Goldstein எனவும் கூறப்படுகிறது.