Loading...
லண்டன் நகர் அண்மையில் யாழ்ப்பாண நகருடன் இரட்டை நகர ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து, கனடாவின் பிறாம்ரன் நகரம் இரட்டை நகர உடன்படிக்கை ஒன்றை வவுனியாக நகருடன் செய்துகொள்ளவுள்ளது.
இதற்கான அழைப்பினை பிறாம்ரன் நகர மேஜர் லின்டா ஜெவ்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Loading...
குறித்த இரட்டை நகர ஒப்பந்த நிகழ்வு பிறாம்ரன் நகர மண்டபத்தில் 2017 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது.
கனடாவின் பிறாம்ரன் நகரில் 20,000 தமிழ் மக்கள் வசிப்பதுடன், இவர்கள் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன், பல தொண்டுகளை ஆற்றிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading...