iPhone 12 கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படும் நாள் நெருங்கிக்கொண்டே வருகின்றது.
இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
எனினும் அவ்வப்போது iPhone 12 கைப்பேசியின் சிறப்பியல்புகள் தொடர்பான உண்மைத் தகவல்களும் வெளிவருகின்றன.
இந்த வரிசையில் தற்போது இக் கைப்பேசியில் பிரதான கமெராக்கள் எவ்வாறு அமையவுள்ளன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 11 கைப்பேசியில் காணப்பட்டமை போன்றே 3 கமெராக்களை கொண்டிருக்கும்.
இதனை விளக்கக்கூடிய வகையில் iPhone 12 கைப்பேசியின் பின்புற கிளாசின் படம் வெளியாகியுள்ளது.
எனினும் சற்று வித்தியாசமாக இக் கமெராவில் LiDAR தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தொழில்நுட்பமானது ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்ட iPad Pro சாதனத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.