கேரட் மிகவும் சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஒரு காய்கறி. இந்த காய்கறி வகையை சேர்ந்த கேரட்டை நாம் தினமும் நமது உடல் ஆரோக்கியத்திற்காக பச்சையாக அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டு வருவோம்.
கேரட் ஜூஸ் குடிப்பதில் எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதோ அதற்கு சரிசம அளவில், நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கான ஒருசில பக்க விளைவுகளையும் தருகின்றது.
எனவே பல வகையான ஆரோக்கியமான மற்றும் விட்டமின் சத்துக்கள் அதிகமாக நிறைந்த கேரட்டை நாம் தினமும் சாப்பிடுவதால், ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
* குழந்தைகளுக்கு அதிகமாக கேரட் அல்லது கேரட் ஜூஸ் கொடுப்பது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. எனவே பச்சிளங் குழந்தைகளுக்கு கேரட்டின் ஒரு சிறு பகுதியை மட்டும் கொடுக்கலாம்.
* கேரட் ஒரு உயர்திறன் கொண்ட காய்கறி வகையைச் சார்ந்தது. எனவே இதை அதிகமாக சாப்பிடும் சிலருக்கு உடம்பின் எதிர்வினையான சரும அலர்ஜி, தோலில் படைகள், ஒவ்வாமை, வயிற்றுபோக்கு மற்றும் தோலில் வீக்கம் போன்ற நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.
* கேரட் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு உகந்த உணவல்ல. ஏனெனில் நீரிழிவு நோயாளி உள்ளவர்களின் உடம்பில் உள்ள ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் மற்றும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேரட் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.
* தினமும் கேரட் சாப்பிடும் சிலருக்கு, தூக்கமின்மை, பதட்டம், எரிச்சல் போன்ற நமது உடம்பிற்கு எதிர்மறையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே தினமும் கேரட் சாப்பிடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
* கேரட்டில் உயர்ரக விட்டமின் சத்துக்கள் மற்றும் மினரல்ஸ் சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளதால், தாய்பால் சுரப்பின் அளவை குறைக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
* குடல் பிரச்சனை, ரத்தத்தில் குறைவான சர்க்கரையின் அளவு உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் ஆகியோர் கேரட்டை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கேரட் சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியத்தின் எதிர்வினையை தூண்டி, சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
* கேரட்டில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் பைபர் உள்ளதால், நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் அடைவதில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு பெருங்குடல் பிரச்சனை, வயிறு வீக்கம் அடைதல், வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.