அமெரிக்காவில் பெற்றோரின் திருமண ஆல்பத்தை பார்த்த சிறுமி, கதறி அழுத நிகழ்வு இணையத்தில் வைரலாகியுள்ளது.
மாட் – ஜென்னா அட்கின்சன் தம்பதியின் மூன்று வயது மகள் பெல்லா. இவர் தனது தந்தையின் மீது அதிக பாசம் கொண்டவர். இந்நிலையில், தன்து பெற்றோரின் திருமண புகைப்பட ஆல்பத்தை பார்த்த பெல்லா கதறி அழுதுள்ளார். பின்னர், தாயைப் பார்த்து தந்தையை திருமணம் செய்து விட்டீர்களா என கேள்வியெழுப்பியுள்ளார் பெல்லா.
அதற்கு தாய் ஆம் என விளையாட்டாக பதில் அளிக்க மீண்டும் கதறி அழுதார். தனது ஆதர்சன நாயகனாக விளங்கிய தந்தையை ஏன் திருமணம் செய்தீர்கள் என தாயிடம் சண்டைக்கு சென்றுள்ளார். அவரின் இந்த வெகுளியான அழுகை உரையாடல் மக்களை வசீகரித்துள்ளது.
@GSBrownABC If your audience could use a quick smile- you should share this video of our daughter Bella realizing she won’t be able to marry daddy matt! ?? pic.twitter.com/VkM6QdWfCx
— Jenna Atkinson (@JennaAtkinsonP5) August 26, 2020