ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக சதுரகிரி ஓடைகள், பாறைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அம்மாவாசை மற்றும் பௌர்ணமியை தவிர பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.