Loading...
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள கடுமையான முடக்கநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் டானியல் அன்ட்ரூஸ் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின் பரவல் குறைவடையாத நிலையிலேயே இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ன் நகரில் நான்காம் படிநிலையில் உள்ள முடக்கநிலை செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.
Loading...
கொரோனா தொற்று வீதம் எதிர்பார்த்த அளவு குறைவடையாத நிலையில், முடக்கநிலையை மேலும் நீடிக்க தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாரம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சில தளர்வுகளுடன் முடக்கநிலை அமுலில் இருக்கும் என மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
Loading...