தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் அதிமுக பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது.
இந்த நிலையில் ஜெலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அந்த பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், கட்சி விதிமுறைகளின் படி கட்சியின் முதன்மை உறுப்பினர் பொறுப்பில் தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் இருந்தால் தான் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆனால் இந்த விதிமுறையை சசிகலா நிறைவேற்றவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சசிகலா புஷ்பாவின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து இருதரப்பு விசாரணை முடிவில் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.