Loading...
கடுவல, கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த யுவதியே உயிரிழந்தார். அவரது தாயார், சகோதரன் பலத்த காயங்களுடன் மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிசார் தெரிவித்தனர்.
Loading...
திங்கள்கிழமை (06) இரவு 11.00 மணியளவில் பலத்த மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தபோது, இஷாரா சாமலி (27) என்ற யுவதியே உயரிழந்தார்.
அவர் மருந்தகமொன்றில் வேலை செய்து வந்தார். யுவதியின் வீட்டை ஒட்டியுள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிலத்தை சுற்றி பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயரமான சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Loading...