தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் இன்று (24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எழுவர் அடங்கிய விசேட சிங்கள ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கின் தீர்ப்பு ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க சற்றுமுன்னர் தீர்ப்பளித்தார்.
ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்ட கடற்படையைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய ரவிராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.