புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாது ஒத்திவைக்குமாறு எல்லே குணவங்ச தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டுக்கு முழுமையான புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவை என்பது எமது நிலைப்பாடு. அந்த அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டுக்கு மிகவும் பாதிப்பான எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாகவும் கூடிய அவதானத்துடன் இருந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு முழுமையான புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவை என்பது எமது நிலைப்பாடு.
அந்த அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்தக் கூடாது. குறிப்பாக எமக்குள் தற்போது சந்தேகம் ஒன்றுள்ளது.
எம்.சீ.சீ. உடன்படிக்கை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், பயிர் செய்யாத 7 லட்சம் ஏக்கர் நிலம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் என்பன தொடர்பாக நாங்கள் தகவல்களை பெற்று கூடிய அவதானத்துடன் இருக்கின்றோம் என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்புகிறோம் என எல்லே குணவங்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.