வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் பொருத்தும் வீட்டு திட்டங்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மற்றும் கிழக்கில் முதற்கட்டமாக 10 ஆயிரம் பொருத்தும் வீடுகள் அமைக்கப்படவுள்ள நிலையில், யுத்ததினால் பாதிக்கப்பட அனைத்து மக்களும் விண்ணப்பிக்க முடியும்.
எமது அமைச்சினால் கடந்த காலத்தில் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே விண்ணபித்திருந்தாலும், மீண்டும் அம்மக்களும் விண்ணபிக்காதவர்களும் விண்ணப்பங்களை செய்ய முடியும்.
இத்திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற விரும்பும் பயனாளிகள் ஆறு இலட்சம் ரூபா கொடுப்பனவு செய்ய வேண்டும் என சில தரப்பினர் தவறான கருத்தினை பரப்பி வருகின்றனர்.
இக்கருத்தும் தவறானதாகும். இவ்வீடுகளுக்கு விண்ணப்பிப்தற்கான விளம்பரம் பல பத்திரிகைளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை பெற விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகங்களில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும்.
இதேவேளை, மக்களை தவறாக வழிநடத்துவதற்கு எவரும் முயலக்கூடாது.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.