ஆப்பிள் நிறுவனம் வழமையாக ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதத்தில் தனது ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்றது.
எனினும் வருடம் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா அனர்த்தம் காரணமாக iPhone 12 கைப்பேசி அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது செப்டெம்பர் மாதமாகியுள்ள நிலையில் ஐபோன் பிரியர்கள் பலரும் ஆவலுடன் புதிய அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இன்னும் சில தினங்களில் iPhone 12 கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அளவில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.