யாழ்ப்பாணம் உள்ளிட்ட ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, சப்ரகமுவ, கிழக்கு பல்கலைக்கழகங்களின் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவைஅங்கிகாரம் வழங்கியுள்ளது.
அந்தவகையில் ரஜரட்ட, ருஹுணு, வயம்ப, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களின் பணியாளர்களுக்காக வசிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண பிரதேச மத்திய நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக 4 மாடிகளை கொண்ட கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பேராதனை பல்கலைக்கழகத்தில் பழமையான கட்டடம் ஒன்றினை புனரமைப்பு செய்வதற்கும் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.