சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளுக்காக 500க்கும் மேற்பட்டவர்கள் கட்சியின் தலைமையகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளை வழங்கக்கூடிய சாத்தியங்கள் கிடையாது.
எனினும் எதிர்வரும் காலங்களில் அமைப்பாளர் பதவிகளுக்கு ஏற்படும் வெற்றிடங்களுக்கு இந்த விண்ணப்பதாரிகளில் மிகவும் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு பல்வேறு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
உரிய முறையில் தமது கடமைகளை செய்யத் தவறும் தொகுதி அமைப்பாளர்கள் எதிர்காலத்தில் நீக்கப்படுவர் என துமிந்த திஸாநாயக்க இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.