64 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் ஒன்று சேர்ந்திருக்கும் விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வசித்து வருபவர் Trent Winstead (88), இவர் மனைவி Dolores Winstead (83) இவர்களுக்கு Eddie மற்றும் Sheryl என இரு பிள்ளைகள் உள்ளார்கள்.
காதலுக்கு வயதில்லை என்ற வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக Trentம் Dolores ம் ஒருவர் மீது ஒருவர் மிகவும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் இருவரும் மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொண்டார்கள். அப்போது Trent ன் சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாள் கழித்து அவர் மனைவி Doloresகு தலைவலி வர அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் மூளையின் இரத்த ஓட்டம் தடைப்பட்டுள்ளதாக கூறி அவரை அவர் கணவர் இருக்கும் மருத்துவமனையிலேயே அதுவும் அவர் இருக்கும் அறையின் பக்கத்து படுக்கையிலேயே சேர்த்தார்கள்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் Dolores இறந்தார். அவர் இறக்கும் போது தன் கணவரின் கையை கெட்டியாக பிடித்தபடி அருகில் இருந்துள்ளார்.
தன் அன்பு மனைவி இறப்பை தாங்க முடியாமல் மனைவியின் கையை பிடித்து கொண்டிருக்கும் போதே Trent ன் உயிரும் பிரிந்துள்ளது.
இறப்பிலும் இணை பிரியாத இந்த காதல் தம்பதிகளின் 64ஆம் வருட திருமண நாள் 2017ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.