முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு தொடர்பான மற்றுமொரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் அச்சுறுத்தல் நிலை குறித்தும் தூதரக கடிதம் குறித்தும்கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு தொடர்பான காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த காணொளி வெளியிடப்பட்டதன் பின்னர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில்,மக்கள் மத்தியில் பல சர்ச்சைகளையும் ஏற்ப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும்,2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்ககொலை செய்யப்பட்ட போது மஹிந்தவே ஜனாதிபதியாக இருந்துள்ளார்.
இதேவேளை,குறித்த தொலைபேசி உரையாடல் உண்மை தான் என முன்னாள் ஜனாதிபதிஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.