Loading...
வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் விபச்சார அழகிகளை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் பிரபாகரன் ஜானுஜன் எழுத்துமூலம் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா பேருந்து நிலையத்தில் அண்மைக்காலமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் தொகை அதிகரித்துள்ளது. அதனால் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
Loading...
அந்த பகுதிக்கு வரும் பெண்களும் இதனால் அசளகரியங்களை சந்திக்கின்றனர் இதனை கட்டுப்படுத்த பொலிசார் துரித நடவடிக்கையெடுக்க வேண்டும் என நகரசபை உறுப்பினர் என்ற ரீதியில் கோரிக்கை விடுக்கிறேன் என எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading...