ஒடிசாவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இறந்த தந்தையின் சடலத்தை மகன் தோளில் சுமந்து சென்ற செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சரியான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் ஒடிசாவில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது அங்கு மேலும் ஒரு சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொதசகி எனும் கிராமத்தை சேர்ந்த சரத் பாரிக் என்பவரின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக கிராம சுகாதார மையத்தில் இறந்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கொதசகி தன் தந்தையின் சடலத்தை ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு தன் தோளில் தூக்கி சென்றுள்ளார்.
சாலையில் சடலத்தை தூக்கி சென்ற அவருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உதவி செய்து அவரது தந்தையை வீட்டில் கொண்டு சேர்த்துள்ளார்.
இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனையில் எந்த வசதியும் இல்லாததால் இது போன்று நடந்திருப்பதாக அம்மருத்துவமனை மருத்துவர் அஜித் தாஸ் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
சரத் பாரிக் தந்தையின் உடல் இறந்து பல மணி நேரத்திற்கும் மேலாக அங்கு வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.