கிளிநொச்சி பெரியபந்தன் பகுதியில் கயிற்றில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இருவரையும் காணவில்லை அவரவர் குடும்பத்தினர் தேடியுள்ளர். இந்த நிலையில் இன்று காலை பெரியபரந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை தொடர்ந்தே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது
சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்ற யுவதியாகும்,இளைஞர் இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதி விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்
#காதல் ஜோடி தற்கொலைக்கு சாதி காரணமா?
கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடியொன்றின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.
கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த இளைஞர் இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டவர் அடிப்படையில் பணியாற்றும் சுசிதரன் (28) இரத்தினபுரத்தைச் சேர்ந்த அண்மையில் பட்டதாரி நியமனத்தின்படி கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.
இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், குடும்பங்களின் எதிர்ப்பு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், திருமணத்திற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்து வந்ததாகவும், உயிரழந்தவர்களின் நெருங்கிய நண்பர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டுமென இருவரும் சில காலம் காத்திருந்ததாகவும், அது முடியாமல் போனதாகவும் நண்பர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கவில்லை, அது பற்றி யாருடனும் பேசவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
காதல் ஜோடியின் உயிரிழப்பிற்கு சமூக முரண்பாடுதான் காரணமா என்பது உறுதியாக தெரிய வரவில்லை. பொலிசாரின் விசாரணையின் பின்னரே அது உத்தியோகபூர்வமாக தெரிய வரும்.