உடல்நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர், நடிகைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இல்லத்தில் வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்திற்கு நிதியுதவியும் வழங்கினார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நகைச்சுவை நடிகர் ராமர், நடிகர்கள் சேது, ரோபோ சங்கர், நடிகை ஆர்த்தி உள்ளிட்டோர் வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திமுக எம்எல்ஏ ரவிச்சந்திரன், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி ஆகியோர் வடிவேல் பாலாஜி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பேட்டியளித்த விஜய பிரபாகரன், வடிவேல் பாலாஜி மரணம், மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.