24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இந்த முறையாவது சொந்தமண்ணில் பெற்று விடலாம் என்ற உத்வேகத்தோடு களமிறங்கிய செரீனா அரையிறுதியோடு ஏமாற்றத்தோடு வெளியேறினார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நியூயோர்க் நகரில் ரசிகர்கள் இன்றி கிராண்ட்ஸ்லாம்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சம்பியன் செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டார் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை 1-6, 6-3, 6-3 என்ற செட்களில் தோற்கடித்தார் அசரென்கா. முதல் செட்டில் ஒரு கேமை மட்டும் விட்டுக்கொடுத்த வில்லியம்ஸ், 30 நிமிடங்களில் கைப்பற்றினார்.
ஆனால், 2வது செட்டில் செரீனாவின் கணுக்கால் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்படவே வலியால் அவதிப்பட்டால். இருப்பினும் சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடிய செரீனா 3-6 என்று 2வது செட்டிலும், 3-6 என்று 3வது செட்டிலும் தோல்வி அடைந்தார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அசரென்கா, ஜப்பானிய வீராங்கனை நோமி ஒசாகாவுடன் சனிக்கிழமை மோதவுள்ளார். இதற்கு முன் கடந்த 2012, 2013 ஈம் ஆண்டு யுஎஸ் ஓபன் இறுதி ஆட்டத்தில் செரீனாவிடம் அசரென்கா தோல்வி அடைந்திருந்தார். ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இறுதிப்போட்டிக்கு அசரென்கா முன்னேறியுள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஜப்பானிய வீராங்கனை ஒசாகா அரையிறுதியில் ஜெனிவர் பார்டியே வீழ்த்தினார். ஜெனிபரை 7-6, 3-6, 3-6 என்ற செட்களில் தோற்கடித்து இறுதிச்சுற்றை உறுதி செய்தார் ஒசாகா.
அமெரிக்க வீராங்கனை பார்டி முதல் முறையாக அமெரிக்க ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய நிலையில் அத்தோடு வெளியேறிவிட்டார். இதற்கு முன் ஒசாகா இரு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.