Loading...
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறு கனடா கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Garnett Genuis, கனேடிய பிரதமர் Justin Trudeauவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் பெருந்தொகையானவர்கள் காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், கனேடிய அரசாங்கம் மெக்னிடிஸ்கி தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Loading...
கனேடிய தமிழ் மக்கள் இலங்கையில் நடந்த காணாமல் போனவர்கள் சம்பந்தமாக நீதி விசாரணையை கோரி நடைப் பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் Garnett Genuis, கனேடிய அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க கோரி கனேடிய தமிழர்கள் டெரொன்டோ மற்றும் மொன்ட்றியலில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி நடைப்பயணத்தை மேற்கொண்டனர்.
Loading...