ஈரோடு மாவட்டம் பாவனி பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் அந்தியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது செல்லும் வழியில் பருவாச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். அந்த நேரத்தில் உடலம் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்பட்ட ஓட்டுநர், பேருந்தை கட்டுப்படுத்த முடியாததால் அருகில் இருந்த வாகன்த்தின் மீது மோதி பேருந்தை நிறுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தர்மசிவம், சிகிச்சைக்காக அந்தயூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எதிரே வாகன போக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். வலிப்பு ஏற்பட்டபோதும் பேருந்தை சாதூர்த்தியமாக இயக்கிய ஓட்டுநருக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.