வடக்கில் உள்ள பிரதான வைத்தியசாலையில் சகோதரமொழி வைத்தியர்கள் வெளிநோயாளர்களை பார்வையிடுவதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக சிங்கள மொழி தெரியாத வெளிநோயாளர்கள் தமது நோய்கள் தொடர்பாக வைத்தியருக்கு தெரிவிப்பதில் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வடக்கு முழுவதும் பெரும்பாலும் பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள், மற்றும் வங்கிகள் (பாதுகாப்பு சேவையாளர்) போன்ற பிரதான இடங்களில் தமிழ்மொழி தெரியாதவர்கள் அதிகம் சேவைகளில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சிரமப்படுவதாக பொது அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார், முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் உள்ள வைத்திய சாலைகளில், இவ்வாறான சகோதரமொழி வைத்தியர்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.