ஜெயலலிதா இயற்கையாக இறக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என அவரின் குடும்ப தோழி கீதா கூறியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள கீதா, ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், என் தாயாரும் ஜெயலலிதா தாயார் சந்தியாவும் சினிமாவிலிருந்த காலத்திலிருந்தே நண்பர்கள். அதன் மூலம் நானும் ஜெயலலிதாவும் நண்பர்கள் ஆனோம்.
பின்னர் அவர் ஆரசியலுக்கு வந்த பின்னர் 1992ஆம் ஆண்டு முதல்வராக இருக்கும் போது அதிமுக பொது குழுவில் அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தேன்.
ஆனால் மன்னார்குடி கும்பல் என்னை தடுத்தது, அவரை பார்க்கவே விடவில்லை. பின்னர் அவர் 1996ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அவரை கடைசியாக சந்தித்தேன்.
அப்போது அவரிடம், இந்த மன்னார்குடி கூட்டம் உன்னை கொன்று விடும். நீ சிறையில் இருக்கவே அவர்கள் தான் காரணம் என ஜெயலலிதாவிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதா செப்டம்பர் 22 அல்லது அடுத்த நாளே இறந்துள்ளார். இதை மறைத்து அவரை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Z பிரிவு கருப்பு பூனைகள் படை பாதுகாப்பில் 24 மணி நேரமும் இருந்த ஜெயலலிதாவை பற்றி போயஸ் கார்டனில் இருந்த அந்த அதிகாரிகள் ஏன் வாயை திறக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வளவு பெரிய அப்பலோ மருத்துவமனையில் CCTV கமெரா இருக்காதா? ஏன் அவர் இறப்பை பற்றி சரியான தகவலை மருத்துவமனை நிர்வாகம் தர மறுக்கிறது?
அவர் கொலை செய்யப்பட்டுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை எனவும் அதற்கு அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி உடந்தை எனவும் அவர் கூறியுள்ளார்.
கடவுள் என்று ஒருவர் இருந்தால் நிச்சயம் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் என்ற ஆதாரம் விரைவில் வெளிவரும் என கூறிய அவர் நான் இப்படி பேசுவதை பார்த்து யாராவது என்னை மிரட்டினால் நான் சும்மா இருக்க மாட்டேன், தனக்கு டெல்லியில் பெரிய செல்வாக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதவிக்காக எதையும் செய்ய துணியும் சசிகலாவுக்கு திராணி இருந்தால் ஆர்.கே நகர் தொகுதியில் நின்று ஜெயிக்கட்டும் என கூறிய அவர் பணபலம் எல்லாம் மக்களிடம் செல்லாது என தெரிவித்துள்ளார்.
விரைவில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து மன்னார்குடி கும்பல் சிறைக்கு நிரந்தரமாக செல்லபோவது உறுதி எனவும் அவர் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.