2016 கிட்டத்தட்ட முடியும் தருணத்தில் இருக்கின்றோம், இந்த வருடம் தமிழ் சினிமா வழக்கம் போல் குறைந்த ஹிட் படங்களை மட்டுமே கொடுத்துள்ளது. இதில் சிலருக்கு ஸ்பெஷல் வெற்றி கூட கிடைத்தது. அது என்னவென்றால் தன் பாணியில் இருந்து விலகி வெற்றிக்கண்டவர்கள் குறித்து இதில் பார்ப்போம்.
இறுதிச்சுற்று
மாதவன் என்றாலே சாக்லேட் பாய் தான், அவர் ஆக்ஷன் படத்தில் கூட காதல் இல்லாமல் இருக்காது, ஆனால், முதன் முதலாக அதுவும் நீண்ட வருடங்களுக்கு பிறகு வந்து முழுக்க முழுக்க முரட்டுத்தனம் கொண்டவராக நடித்த படம் தான் இறுதிச்சுற்று, இந்த படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பிச்சைக்காரன்
தமிழ் சினிமாவை பொறுத்தவரை செண்டிமெண்ட் என்பது மிகவும் முக்கியம், கோவிலை காட்டி தான் பல படங்களில் படத்தின் முதல் காட்சியை தொடங்குவார்கள், ஆனால், டைட்டில் நெகட்டிவாக வைத்து, அம்மா செண்டிமெண்ட் பழசு என்றாலும், இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களையும் கவரும் படி எடுத்தார் சசி, இப்படம் வெற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
விசாரணை
வெற்றிமாறன் படம் என்றாலே நன்றாக தான் இருக்கப்போகிறது, யதார்த்தமாக தான் இருக்கும், பிறகு என்ன மாற்றம் என்று நீங்கல் கேட்கலாம், ஆனால், பொல்லாதவன், ஆடுகளம் என்ன தான் யதார்த்தம் என்றாலும் அதில் நிறைய கமர்ஷியல் விஷயங்களை சேர்த்திருப்பார், அப்படி எந்த ஒரு கமர்ஷியல் விஷங்களும் இல்லாமல் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம் விசாரணை.
கபாலி
கபாலி ரஜினி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம், நெருப்புடா என மாஸ் டீசர் வெளிவந்து ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பது உண்மை தான், ஆனால், தளபதி படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பிற்கு ஸ்கோப் கொடுத்து எடுத்தப்படம் தான் கபாலி, ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தற்போது இதை கொண்டாடி வருகின்றனர்.
மனிதன்
உதயநிதி படம் என்றாலே காமெடி, சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் இதெல்லாம் இல்லாமல் எப்படி? என்று ரசிகர்களிடம் ஒரு கேள்வி இருந்துக்கொண்டே இருந்தது, ஆனால், முதன் முறையாக இதில் எந்த ஒரு விஷயமும் இல்லாமல் கதையின் மீது நம்பிக்கை வைத்து உதயநிதி நடித்த படம் தான் மனிதன், படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.