Loading...
மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், பல நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் கட்டுப்படுகின்றன.
Loading...
மீனை தினமும் உங்கள் உணவு பட்டியலில் சேர்ப்பதால் உண்டாகும் ஆரோக்கிய நலன்களை இப்போது காண்போம்.
- தினமும் மீன் சாப்பிடுவதால், இரத்தக் குழாய் மற்றும் இதயம் சார்ந்த நோய் அபாயங்கள் குறைகின்றன.
- இதய ஆரோக்கியத்திற்கு உகந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிகம் உள்ளது. இந்த சத்து , அழற்சியை குறைத்து, இதயத்தை பாதுகாக்கிறது .
- மூளை சீராக செயலாற்ற, மீன் உணவுகள் பெருமளவில் உதவுகின்றன.
- இதனால், அல்சைமர் நோய்க்கு, மீன் சாபிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து மீன் சாப்பிடுவதால் மூளை சீரழிவு குறைகிறது.
- மூளை செயல்பாடுகளில் ஏற்படும் பல்வேறு சிக்கலும் தடுக்கப்படுகிறது.
- மனச்சோர்விற்கான அறிகுறியை உணர்பவர்கள், மீனை சாப்பிடலாம்.
- மீன் அல்லது மீன் எண்ணெய், மனச்சோர்வின் அறிகுறியை குறைத்து சீரான மன நிலையை தருகிறது. இதனால் மன ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
- மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கண் பார்வையை அதிகரித்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மூளை மற்றும் கண் ஆகிய இரண்டின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளுக்கு இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மிகவும் தேவைப்படுகிறது.
- நீண்ட நேரம் தூக்கம் வராமல், தவித்து கொண்டிருப்பவர்கள், மீனை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
- மீனை அதிகம் உட்கொள்பவர்கள், நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற்றிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம், மீனில் உள்ள அதிகமான வைட்டமின் டி சத்து .
- உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை மீனுக்கு உள்ளது.
- மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு மட்டும் இல்லாமல், உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதையும் தடுக்கிறது.
- கொழுப்பு மீன்களை உட்கொள்வதால், டைப் 1 நீரிழிவு நோய் தடுக்கப்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
- மீனில் வைட்டமின் டி அதிகமாக இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
Loading...