Loading...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக திகழ்ந்த சதாசிவ் பாட்டீல் காலமானார்.
தூக்கத்தில் சதாசிவ் பாட்டீலின் உயிர் பிரிந்ததாக கோலாபூர் கிரிக்கெட் சங்க நிர்வாகி ரமேஷ் கடம் தகவல் தெரிவித்துள்ளார். சதாசிவுக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளார்கள்.
1955-ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடியுள்ளார் சதாசிவ். அந்த ஆட்டத்தில் 14 ரன்களும் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். அதன்பிறகு இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
Loading...
மஹாராஷ்டிர அணிக்காக 36 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 866 ரன்களும் 83 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ரஞ்சி கோப்பையில் மஹாராஷ்டிர அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.
உயிரிழந்த சதாசிவ்வுக்கு வயது 86 என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...