இன்னொருவரின் மனைவி, வாருங்கள் கொஞ்சம் நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அனுப்பிய குறுஞ்செய்தியை நம்பிச் சென்ற பிரித்தானியர் ஒருவர், கடைசியில் சடலமாகக் கூட கிடைக்கவில்லை.
தொழிலதிபரான ஆண்ட்ரூ ஜோன்சின் (53) மனைவியான ரியானானுக்கும், மூன்று குழந்தைகளுக்கு தந்தையான மைக்கேல் ஓ லியரி (55) என்ற நபருக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதை ஆண்ட்ரூவும் அவரது மகள் கேரியும் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஒரு முறை எச்சரித்தபின்னரும், அவர்களது உறவு ரகசியமாக தொடர்ந்துள்ளது. அதற்காக இருவரும் ரகசிய மொபைல் போன்களை பயன்படுத்தி தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
அதையும் கவனித்த ஆண்ட்ரூ, ஒரு நாள் அந்த மொபைலையே மனைவிக்குத் தெரியாமல் எடுத்து, அதிலிருந்து மைக்கேலுக்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், வாருங்கள், நாம் கொஞ்ச நேரம் சந்தோஷமாக இருக்கலாம் என ரியானான் செய்தி அனுப்புவது போல கூறியுள்ளார்.
ரியானான் அழைப்பதாக எண்ணி, ஆசையுடன் ஓடோடி வந்த மைக்கேலை சுட்டுக்கொன்றுள்ளார் ஆண்ட்ரூ.
பின்னர் மைக்கேலின் உடலை, தனது கைபடாமல் இருப்பதற்காக, பழு தூக்கும் கருவியின் உதவியால் தூக்கி அகற்றி எரித்திருக்கிறார்.
பின்னர், அவரது மொபைலை எடுத்து, அதிலிருந்து, என்னை மன்னித்துவிடு என மைக்கேலின் மனைவி சியான்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
மைக்கேலைக் காணாமல் பொலிசார் தேடிவந்த நிலையில், ஆண்ட்ரூ அவரது உடலை எரித்து காணாமல் போகச் செய்துவிட்டாலும், அந்த பழு தூக்கும் கருவியிலிருந்த மைக்கேலின் சிறுகுடலின் துணுக்குகள் ஆண்ட்ரூவைச் சிக்கவைத்துவிட்டன.
ஆனால், தங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கைகலப்பின்போது துப்பாக்கி தவறுதலாக வெடித்துவிட்டதாக கூறியுள்ள ஆண்ட்ரூ, தன் மீதான கொலைக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். வழக்கு தொடர்கிறது.