Loading...
பேஸ்புக்கில் படங்கள், வீடியோக்கள் என்பவற்றினை பகிர முடியும் என்பது அறிந்ததே.
அதேபோன்று வீடியோக்களை நண்பர்களுடன் இணைந்து ஒரே நேரத்தில் பார்க்கக்கூடிய வசதியையும் தருகின்றது.
இந்நிலையில் இச் சேவையை மேலும் விஸ்தரித்துள்ளது.
அதாவது பேஸ்புக்கின் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனிலும் தற்போது இவ்வாறான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Loading...
வீடியோ அழைப்பில் 8 பேர்வரையில் இவ்வாறு பார்வையிடக்கூடியதாகவும், வீடியோ கொன்பரன்ஸ் வசதியில் 50 பேர் வரை ஒரே நேரத்தில் பார்வையிடக்கூடியதாகவும் இருக்கின்றது.
இவ் வசதிக்கு Watch Together எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் இவ் வசதியானது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Loading...