அமெரிக்காவில் உள்ள பல்வேறு இடங்களில் வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் கொத்து கொத்தாக இறந்து விழுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ், கொலராடோ, டெக்ஸாஸ் மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட பகுதிகளில் பறந்து கொண்டிருந்த தவிட்டுக் குருவிகள், ராபின்கள், சிட்டுக் குருவிகள் உள்ளிட்ட பறவைகள் வானிலிந்து விழுந்து இறந்து வருகின்றன.
இந்த விடயம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இறந்து போன பறவைகளின் எண்ணிக்கையை சரியாக இன்னும் குறிப்பிட முடியவில்லை என கூறப்படுகிறது.
பறவைகள் இப்படி கொத்து கொத்தாக இறப்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையில் கலிபோர்னியா உள்ளிட்ட சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.
இதன் விளைவாக ஏற்பட்டுள்ள புகை மண்டலம் காரணமாக பறவைகள் அதிகமாக உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.