ஜப்பானின் 99-வது பிரதமராக அபேயின் வலதுகரமாக செயல்பட்ட யோஷிஹைட் சுமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜப்பான் நாடாளுமன்றம் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுமாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக யோஷிஹைட் சுமா தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு, புதன்கிழமை நடந்த வாக்கெடுப்பில் சுமா தான் அடுத்த பிரதமர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அபேயின் வலதுகரமாக செயல்பட்ட புதிய பிரதமர் யோஷிஹைட் சுமா, தனது முன்னோடியின் கொள்கைகளைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையுடன் பிரதமர் யோஷிஹைட் சுமாவுக்கு ஜப்பான் மன்னர் இம்பீரியல் அரண்மைனையில் ஒப்புதல் அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
71 வயதான சுகா பல ஆண்டுகளாக தலைமை அமைச்சரவை செயலாளராக பணியாற்றியுள்ளார், பிரதமருக்குப் பிறகு அரசாங்கத்தின் மிக மூத்த நபராக செயல்பட்டுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக ஷின்சோ அபே கடந்த மாதம் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
#Japan: #YoshihideSuga formally takes charge as PM after @AbeShinzo‘s resignation pic.twitter.com/sPNU6KfHuh— DD News (@DDNewslive) September 16, 2020
முன்னதாக புதன்கிழமை, அபே தனது இறுதி அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தனது ஆட்சியில் நடந்த சாதனைகள் குறித்து பெருமைப்படுவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.