பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கப்பட்டு தற்போது நடந்து வருகின்றது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பரிசோதனை செய்யபட வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது.
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள தயாரான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாராளுமன்ற அவையில் 17 எம்.பி.க்களுக்கும், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்களும் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் சுமார் 40 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா உறுதியானவர்களில் பாஜக எம்பிக்களே அதிகம் இருக்கின்றனர் என்றும், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பாராளுமற்ற கூட்டத்தொடரில் பங்கேற்கின்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பெரும் பீதியில் உறைந்து போயுள்ளனர்.