கேரளா மாநிலத்தில் பாலக்காடு பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன், அனிதாமொழி தம்பதிக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். ஆலப்புழாவில் உள்ள பினு என்ற உறவினரின் வீட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக இவர்கள் கலந்து கொள்ள சென்றுள்ளனர். திருமணம் முடிந்த பின்னர், மாலை நேரத்தில் அனிதாமொழியின் தன்னுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் பினுவின் மகனோடு கடற்கரைக்கு விளையாட சென்றுள்ளனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு கடல் சீற்றம் அன்று சற்று அதிகமாக இருந்தது. எனவே, காவல்துறையினர் கடற்கரைக்கு உள்ளே செல்ல அவர்களது குடும்பத்தை அனுமதிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் பினு காரை நிறுத்தச் சென்ற நேரத்தில் அனிதாமொழி தனது குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து இருக்கின்றார்.
அப்போது எதிர்பாராத நேரத்தில் திடீரென வேகமாக எழும்பிய ராட்சத அலை காரணமாக அனிதாமொழி தடுமாறி கீழேவிழுந்துள்ளார். ஆனால், இரண்டு குழந்தைகளையும் அவர் இழுத்துப் பிடித்து இருக்கின்றார்.
அப்போது அவரின் கைலிருந்த இரண்டரை வயது மகன் ஆதிகிருஷ்ணா கடலலையில் அடித்து இழுத்துச்செல்லப்பட்டான். இதன் காரணமாக மாவட்ட குழந்தைகள் நலவாரியம், போலீஸ் தடுத்த பின்னும் குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றதற்காக அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யுமாறு வலியுறுத்தி இருக்கின்றனர்.